இலஞ்ச சட்டத்தை மீரும் வகையில் சட்ட விரோதமாக அவா நிறைவொன்றை கொடுத்தல், கேட்டல், பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவ்வாறு இலஞ்ச சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செய்யப்படும் செயற்பாடுகள் இலஞ்சமாக கருதப்படும்.
பணம் அல்லது பணத்தால் மதிப்பிடக்கூடியவைகளும், பணத்தால் மதிப்பிட முடியாவிட்டாலும் உதவிகளும், நன்மைகளும் அவாநிறைவாக கருதப்படும்.
அரச ஊழியர் ஒருவர் தனது கடமையை நிறைவேற்றுவதற்காக, நிறைவேற்றுவதிலிருந்து விலகியிருப்பதற்காக, கடமையை விரைவாக செய்வதற்காக, தாமதப்படுத்துவதற்காக, இடையூறு செய்வதற்காகவும் ஒரு வேலையைச் செய்யும் போது ஆள் ஒருவருக்கு உதவி செய்வதற்காக , இடையூறு விளைவிப்பதற்காக பக்கச் சார்பாக நடந்து கொள்வதற்காக, தாமதப்படுத்துவதற்காக அவாநிறையொன்றைப் பெற்றுக் கொள்தல் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
ஊழல் சம்பந்தமாக இலஞ்ச சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுல்லது. அதாவது அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பிரகாரம்தனக்கு பணிக்கப்பட்டுல்ல கடமையை நிறைவேற்றும் பொது அரசுக்கு நடத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நன்மையை அல்லது வேறு ஒருவருக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிந்து செயற்படுதல் ஊழலாகக் கருதப்படும்.
|
அமைச்சரவை அமைச்சர்கள் |
|
சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் |
|
குழுக்களின் பிரதித் தலைவர் |
|
பிரதி அமைச்சர்கள் |
|
மாகாண ஆளுனர்கள் |
|
மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் |
|
பாராளுமன்ற உறுப்பினர்கள் |
|
நீதிமன்ற உறுப்பினர்கள் |
|
மாகாண, உள்ளூராட்சி நிலையங்களின் அல்லது இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகளின் தலைவர்கல், பணிப்பாலர்கள், ஆளுனர்கல், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊளியர்கள். |
|
யூரி சபை உறுப்பினர்கள்.
|
|
சகல அரச ஊளியர்களும் விஷேடமான சந்தர்ப்பங்களில் சகலருக்கும்.
|
|
அரசாங்கம் அல்லது நீதிமன்றத்தால் ஏதாவது ஒரு காரணத்தை சமாளிக்கும்படி பாரம் கொடுத்து இருக்கும் நபர்களுக்கு. |
|
அதிகாரமளிக்கப்பட்ட நில அலவையாலர்கள். |
|
நீதி மன்றத்தினால் அல்லது அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களால் ஏதும் ஒரு செயற்பாட்டிற்கு அறிக்கை சமர்ப்பிப்தற்காக அல்லது முடிவுக்கு கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் அல்லது வேறு ஒருவர். |
முடியாது. ஆளொருவரின் அறிவு அல்லது சம்மதத்துடன் செயற்படும் குறிப்பிட்ட நபர் அல்லது வெரு ஒரு நபரோ நெரடியாகவோ மறைமுகமாகவோ அவாநிறைவொன்றை ஏற்றுக் கொன்டால் அல்லது ஏற்பதற்கு சம்மதித்தால் அக் குற்றத்தைக் குறிப்பிட்ட முதலாம் ஆல் செய்ததாகவே சட்டத்தால் கருதப்படும்.
இலஞ்ச சட்டத்தின் கீழ் இலஞ்சம் வாங்குவதைப் பொல இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராளும் சந்தர்ப்ங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்ல இலஞசம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.
இருந்த போதிலும் ஒருவர் இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிரந்த செயற்பாடாகும்.
இலஞ்சத்தைப் பரிந்து கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் அல்லது அனுஆனை வழங்குதல் போன்ற குற்றங்களுக்கு குற்றவாளியானால்.
|
7 ஆண்டுகளுக்கு விஞ்சாத .......... சிறைத் தண்டனையுடன் ரூபா 5000/= திற்கு மேற்படாத தண்டப் பணம் விதித்தல். |
|
மேற் குறிப்பிட்ட தண்டனைகளுக்கு மேலதிகமாக இலஞ்சத்திற்காக பரிமாற்றஞ் செய்யப்பட்ட அவாநிறைவொன்றின் பெருமதிக்கு சமமான தொகையை தண்டப் பணமாக அறவிடுதல். |
ஏதும் ஆதனமொன்று இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட 1(அ) தண்டனைக்கு மேலதிகமாக இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு விஞ்சாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்பட்டின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய இரண்டும் வழங்கப்படடும்.
தனது தொழிலை அல்லது பதவியை இலப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் இரத்துச் செய்யப் படும்.
பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகமை அற்றிருத்தல்.
அரசின் அல்லது இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக இழத்தல்.
இலஞ்ச ஆணைக்குழுவிற்கு தனிப்பட்ட முறையில் வருகை தருவதன் மூலம். தபால் மூலமாக எழுதி அனுப்பலாம் (தகவல் பத்திரிகையைப் பார்க்கவும்) தொலைநகல் மூலம் தொலைபேசி மூலம்.
|