Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் எம்மைப் பற்றி
எம்மைப் பற்றி

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச் சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்காக இலஞ்ச சட்டமும் தேசிய அரசப் பெரவையின் 1975ம் ஆண்டின் 1ஆம் இலக்க சொத்துக்களையும் பொருப்புகளையும் வெளிப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் குற்றமாகக் காணப்படும் செயற்பாடுகளுக் கெதிராக வழக்குத் தொடர்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட  நிரந்தர ஆணைக் குழுவாக இவ் ஆணைக்குழு 1994ம் ஆண்டின் 19 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளது.

இதனடிப் படையில் முதன் முதலாக ஆணைக்குழுவின் பணிகள் 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி ஆரம்பமானது.

இவ் ஆணைக்குழுவானது மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருப்பது அவசியமாகும். அவர்களில் இருவர் ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற அல்லது மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இருக்க வேண்டும். மற்றவர் குற்றப் புலனாய்வுடன் சட்டத்தை அமுலாக்குவதோடு பரந்த அனுபவ முள்ளவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு உறுப்பினரினதும் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். பதவிக் காலத்தின் பின் திரும்பவும் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட தகுதியற்றவராவர்.


நாங்கள்

ஒருவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கோ ஒருவரால் அன்மையில் தனது பிரசித்திப் பெற்ற ஆதாயத்தை மீறி செய்யப்பட்ட சொத்துக்கள் கைப்பற்றுதல் சம்பந்தமாக ஆணைக்குழுவிற்கு அரிவித்தல் ஒண்று கிடைத்த பொழுது,

 

பரீட்சித்தல்
வழக்கிடுதல்
தவிர்த்தலுக்காகச் செயற்படுதல்

புலன் விசாரணைக்காக தேவைப்படும் முக்கிய தகவல்கள் என்னவென்றால்,

தகவல் பத்திரிக்கை

ஆணைக்குழுவின் வரலாறு

 

செயற்பாடுகள்

இறுதியாக :  2013-05-20