Emblem of Sri Lanka
අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு COMMISSION TO INVESTIGATE ALLEGATIONS OF BRIBERY OR CORRUPTION

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரல் - 2026

வெற்றிடங்களின் எண்ணிக்கை01
விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதி2026.11.09
ஆரம்பச் சம்பளம்ரூபா 212,000
அறிவித்தல்விண்ணப்பப்படிவம்விண்ணப்பப்படிவம் (English)

2023-ஆம் ஆண்டின் 9-ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 26(1) பிரிவின்படி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவிக்கான வெற்றிடத்திற்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

01.
ஆட்சேர்ப்புக்கு அவசியமான தகைமைகள்:-
1.1கல்வித் தகைமைகள்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து சட்டம் தொடர்பான பட்டப் பின்படிப்பு பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.
1.2தொழில் சார் தகைமைகள்இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்திருத்தல் வேண்டும்.
1.3அனுபவம்இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்த பின்னர், குற்றவியல் வழக்குகளில் குறைந்தது 15 ஆண்டுகள் செயற்பாட்டு தொழில்முறை அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
1.4உடல்சார் தகைமைகள்ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கும், பதவியின் கடமைகளை ஆற்றுவதற்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
1.5ஏனையவை

i. இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும்.

ii. விண்ணப்பதாரர்கள் சிறந்த நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

iii. விண்ணப்பங்கள் கோரும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்குள், பதவிக்கான ஆட்சேர்ப்புக்குத் தேவையான தகைமைகள் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

02.
வயது

- ஆகக் குறைந்த எல்லை : 40 வருடங்கள்

- உச்ச எல்லை : 54 வருடங்கள்

03.
சம்பளத் திட்டம்:- ரூபா 212,000- 10x4950 – 261,500

அதன்படி, இந்தப் பதவிக்கான சம்பளக் குறியீடு AC-E-4-2025 மற்றும் ஆரம்பச் சம்பளப் படிநிலை ரூபா. 212000/- ஆகும். மேலும், 2026.03.17 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இப்பதவிக்குப் பொருந்தக்கூடிய இதர படிகளும் வழங்கப்படும். (2027.01.01-க்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டால், சம்பள விகிதத்தின் அட்டவணை II-இன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, வழங்கப்படும் சம்பளம் ரூபா 183,300.00 ஆக இருக்கும்.)

04.
ஆட்சேர்ப்பு முறை :-
4.1
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
4.1.1
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை :
மதிப்பெண்கள் வழங்கப்படும் முக்கிய விடயங்கள் உச்சப் புள்ளிகள் தெரிவு செய்வதற்கு பரிசீலிக்கப்படும் ஆகக்குறைந்த புள்ளிகள்
1. மேலதிக கல்வித் தகைமைகள் 20 60
2. மேலதிக சேவை அனுபவம் 10
3. ஆங்கில அறிவு 10

4. நீதி மன்ற நடவடிக்கை

தொடர்பிலான பரிந்துரை

30

5. நேர்முகப் பரீட்சையில்

வெளிப்படுத்தும் திறன்கள்

30
மொத்தப் புள்ளிகள் 100
4.1.2
கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை குழு 3 அங்கத்தவர்களை உள்ளடக்குதல் வேண்டும்.
4.1.3
தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களில், கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சையில் மிக உயர்ந்த தகுதியை வெளிப்படுத்தும் விண்ணப்பதாரர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
4.1.4
ஆட்சேர்ப்பின் போது, மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள முக்கியப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உச்சப் புள்ளிகள் உள்ளடக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கான விரிவான புள்ளி வழங்கும் திட்டம் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படும்.
05.
சேவையில் உள்ளீர்ப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:-
i.
இந்த நியமனம், ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, 2026.09.01 திகதியிட்ட 2504/07 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது.
ii.
இந்தப் பதவி நிரந்தரமானது. ஊழியர் சேம நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி நலன்கள் உரித்தானது.
iii.
இந்த நியமனம் 3 வருட தகுதிகாண் காலத்திற்கு உட்பட்டது.
iv.
தகுதிகாண் காலத்தின் முடிவில், திருப்திகரமான பணி, வருகை, நடத்தை மற்றும் செயலாற்றுகை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணி நிரந்தரமாக்கப்படும்.
v.
ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டு நடைமுறையின்படி, உங்கள் செயலாற்றுகை தரம் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்படும். அதன்படி, எதிர்கால சம்பள உயர்வுகள் வழங்கப்படும், மேலும் அந்த செயலாற்றுகை தரம் பதவி உயர்வுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
vi.
2023-ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்சட்டம், 2026.09.01 ஆம் திகதியிடப்பட்ட இல 2504/07 வர்த்தமானி அறிவித்தலில் உள்ளீர்க்கப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விதிகள், தாபன விதிகள் கோவை பாகம் II, நிதிப்பிரமாணங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள் மற்றும் சுற்றுநிருபங்களுக்கு இந்த நியமனம், உட்பட்டது.
vii.
ஆட்சேர்ப்பிற்கான மொழி மூலம் ஆங்கிலம் ஆகும்.
viii.
அரச கரும மொழி அல்லாத வேறு பயிற்று மொழியில் பணியில் சேர்ந்த அதிகாரிகள், தகுதிகாண் காலத்தில் அரச கரும மொழியில் பரிந்துரைக்கப்பட்ட தேர்ச்சியைப் பெற வேண்டும்.
ix.
சேவை தேவையின் அடிப்படையில் இலங்கையின் எந்தப் பாகத்திலும் பணி புரியக்கூடியவராய் இருத்தல் வேண்டும்.
06.
விண்ணப்பதாரர்களின் ஆளடையாளம் :-
i.
அனைத்து வகையிலும் முழுமையான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேமுகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
ii.
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சையில் தங்களின் ஆளடையாளத்தை நிரூபிக்க, பின்வரும் ஆளடையாள ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
a)
ஆட்பதிவு ஆணையாளரால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை
b)
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
c)
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
07.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை:
i.
விண்ணப்பங்களை, பணிப்பாளர் நாயகம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, தபால் பெட்டி இல 1431, 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு, 2026.11.09 -ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பதிவுத் தபால் மூலம் அனுப்பதல் வேண்டும். குறித்த திகதிக்குப் பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ii.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பத்தின் மாதிரிப் படிவம் இந்த அறிவித்தலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை A4 அளவுடைய தாளில் தயாரித்து ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
iii.
விண்ணப்பம் அடங்கிய உறையின் இடது மேல் மூலையில் “மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவிக்கான திறந்த ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்களை கோரல்” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
iv.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் கையொப்பமானது சமாதான நீதவான் / சத்தியப்பிரமாண ஆணையாளர் / சட்டத்தரணி / பிரசித்த நொத்தாரிசு / முப்படையைச் சேர்ந்த ஆணை பெற்ற உத்தியோகத்தர் ஒருவரால் அல்லது அரச நிறுவனத்தின் நிறைவேற்றுத்தர அதிகாரியால் அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
v.
தபாலில் தொலைந்துவிட்டதாகவோ அல்லது தபாலில் தாமதமாகிய விண்ணப்பங்கள் குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது. இறுதித் திகதி வரை விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தும் விண்ணப்பதாரர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
vi.
விண்ணப்பத்துடன் பின்வரும் ஒவ்வொரு ஆவணத்தினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றும் இணைக்கப்படல் வேண்டும், வேறு எந்த ஆவணங்களும் இணைக்கப்படக் கூடாது.
a)
தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
b)
பிறப்புச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
c)
மேலே விண்ணப்பித்த கல்வித் தகுதிகள் தொடர்பான சான்றிதழ்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள்

குறிப்பு: விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை சரிபார்ப்பதற்காக, நேர்முகத்தேர்வின் போது தொடர்புடைய ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

08.
தவறான தகவல்களை வழங்குதல்.

ஆட்சேர்ப்புக்கு முன்னர் உங்கள் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட ஏதேனும் தகவல் தவறானது அல்லது பிழையானது எனக் கண்டறியப்பட்டால், உங்கள் பரீட்சார்தி தகுதி ரத்து செய்யப்படும். ஆட்சேர்ப்புக்குப் பிறகு அத்தகைய தவறான அல்லது பிழையான தகவல் கண்டறியப்பட்டால், தொடர்புடைய நடைமுறைகளுக்கு உட்பட்டு உங்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

09.
வெற்றிடங்களை நிரப்புவது/நிரப்பாமல் விடுவது குறித்த இறுதி முடிவு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.
10.
ஆட்சேர்ப்பு சம்பந்தமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முடிவே இறுதியானது.
11.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை அல்லது வேறுபாடு இருப்பின், சிங்கள உரையே மேலோங்கும்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம்,

ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க,
பணியாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
தபால் பெட்டி இல : 1431,
36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

தொலைபேசி இல: 011-2582864
மின்னஞ்சல் முகவரி : da@ciaboc.gov.lk

விண்ணப்பப்படிவம்

அசல் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்குக (Download): PDF

விண்ணப்பப்படிவம்

15.0 விண்ணப்பதாரரின் உறுதிமொழி:

இந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், எனது அறிவுக்கு எட்டியவரை உண்மையானவை மற்றும் சரியானவை என்று நான் உறுதியளிக்கிறேன். ஆட்சேர்ப்புக்கு முன்னரோ அல்லது பின்னரோ, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்று தவறானது அல்லது துல்லியமற்றது எனக் கண்டறியப்பட்டால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு எனது பரீட்சார்தி தகுதியை/அல்லது நியமனத்தை ரத்து செய்யும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை நான் புரிந்துகொள்கின்றேன்.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்படவும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி நான் தகுதியற்றவன் எனக் கண்டறியப்பட்டால், ஆட்சேர்ப்புக்கு முன்னரோ அல்லது பின்னரோ எனது பரீட்சார்தி; தகுதியை/அல்லது நியமனத்தை ரத்து செய்ய எடுக்கப்படும் எந்தவொரு முடிவுக்கும் உட்படுவதற்கும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.

விண்ணப்பதாரரின் கையொப்பம்.
திகதி :-

16.0 கையொப்பத்தை உறுதிப்படுத்துதல்:

இந்த விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் திரு./திருமதி/செல்வி , என்பவர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் என்றும், அன்று என் முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்றும் இதன்மூலம் உறுதிப்படுத்துகின்றேன்.

கையொப்பத்தை உறுதிப்படுத்துபவரின் கையொப்பம்
மற்றும் அலுவலக முத்திரை

கையொப்பத்தைச் உறுதிப்படுத்துபவரின் முழுப் பெயர் :-

பதவி :-
முகவரி :-
திகதி :-

விண்ணப்பப்படிவம் – ஆங்கில மொழிப் பிரதி (English Application Form)

Download: PDF

English Application Form